Paayum Oli Nee Enakku..!

ebook

By Premalatha Balasubramaniam

cover image of Paayum Oli Nee Enakku..!

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

"சாரி டாக்டர்... என்னால இந்த சிகிச்சைக்கு ஒத்துழைக்க முடியாது!"

"இல்லை அபிராமி, இதை வளர விட்டால் உங்களுக்கு மனச்சிதைவு ஏற்பட கூட வாய்ப்பு இருக்கு!" என்று அவளுக்கு புரிய வைத்திடும் வேகத்தில் டாக்டர் சொல்ல,

"இல்லை! இல்லை!! அப்படி எதுவும் ஆகாது... நீங்க எனக்கு சிகிச்சை கொடுத்து என் அத்தானோட நினைவுகளை, அவரோட நான் வாழற வாழ்க்கையை பறிச்சிட்டீங்கன்னாதான் எனக்கு ஏதாவது ஆகிடும்!" என்று வெறி பிடித்தவள் போல் கத்திய அபிராமியின் தேகம், உணர்ச்சிகளின் தாக்கத்தில் நடுங்கத் தொடங்கியது.

அவளது அந்த வெடிப்பு, இப்போதிருக்கும் நிலைமையில் அவளுக்கு நல்லதில்லை என்று எண்ணிய டாக்டர், "ரிலாக்ஸ்... ரிலாக்ஸ் அபிராமி!" என்று அவளை அமைதிப் படுத்த முயன்றார்.

"இல்லை... நான் சொல்லிடறேன்!" என்று பிடிவாதத்துடன் அபிராமி தொடர்ந்தாள்.

"என்னால நான் வாழற இந்த வாழ்க்கையை எக்காரணத்தைக் கொண்டும் விட்டுக் கொடுக்க முடியாது... அது... அது மட்டும் இல்லன்னா, என்னால எந்த வேலையும் ஒழுங்கா செய்ய முடியாது! அந்த வாழ்க்கைதான் எனக்கு வாழறதுக்கான சக்தி கொடுக்குது!. அந்த வாழ்க்கை இல்லைன்னா என்னால சரியா மூச்சு... மூச்சு கூட விட முடியாது டாக்டர்... மூச்சு முட்டி நான் செத்து போய் விடுவேன்... கண்டிப்பா செத்தே போய் விடுவேன்!"

பைத்தியம் பிடித்தவளைப் போலப் பிதற்றியவள், "என்னை விட்டுடுங்க... இப்படியே விட்டுடுங்க... எனக்கு எந்த சிகிச்சையும் வேண்டாம்... வேண்டாம்... வேண்டாம்!" என்று கதறி அழ ஆரம்பித்தாள்.

Paayum Oli Nee Enakku..!